நெட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளுக்காக மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சிஎல்ஐஆர் நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்வு கால அட்டவணையை நேற்று என்டிஏ வெளியிட்டது. அதில் 8 பாடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் ஹால் டிக்கெட் வருகின்ற 13-ஆம் தேதியில் வெளியிடப்படும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011-40759000/011-69227700 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
Comments
Post a Comment