TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?.. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய தகவல்..!!!!



தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.



அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். அவ்வகையில் கடந்த மே மாதம் 5,413 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது.


ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.சமீபத்தில் குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியலில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பழங்குடியினர்,மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்து ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவை சேர்ந்த தேவர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான பதிலளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு முன்னேறி விடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தேர்வர்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் முதன்மை தேர்வுக்கு முன்னேறி விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது . மேலும் இந்த மாதத்திற்குள் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Comments

Popular posts from this blog