NEET UG 2022: செப்.7-ல் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 17-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர்.
இந்நுழைவுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நீட் தேர்வின் ஆன்சர் கீ ஆன்லைனில் வெளியாகும் என எதிர்பார்க்கவும்பட்டது.
இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியத் தேர்வுகள் முகமை இதனை அறிவித்துள்ளது. மேலும் ஆன்சர் கீ ஆன்லைனில் ஆகஸ்ட் 30-ந் தேதிக்குள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள் தொடங்கும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
Comments
Post a Comment