பணி நிரந்தரம் கோரி மாநாடு நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பதாக உறுதி




கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்தது.



2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களினால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. குறைவான ஊதியம் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விதிமுறையை திருத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


பணி நிரந்தர கோரிக்கை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளித்து அதனை பின்பற்றி தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.


அவர்களிடம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முயற்சிகள் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் நடத்தும் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்க வேண்டுமென்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர். இந்த கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டு மாநாட்டில் கலந்துகொள்ள தேதி அளிக்க முன்வந்துள்ளதாக பகுதிநர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


Comments

Popular posts from this blog