ஞாயிறன்று பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் : ஆய்வு செய்து கோட்டாச்சியர் எடுத்த அதிரடி முடிவு!!




பழனியில் அரசு விதிகளை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிகளில் பழனி கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பள்ளிகள் செயல்படுவதாக புகார்‌எழுந்தது.



இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் சண்முக நதி அருகே செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆய்வு செய்தார்.


அப்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மாணவர்களை சிறப்பு வகுப்பு எனக்கூறி வரவழைத்து பாடம் நடத்திவந்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் மட்டும் நடந்து வந்தது.


இதனால் பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியரின் வருகைக்காக நீண்டநேரம் காத்திருந்தும் யாருமே வராததால்‌ பள்ளியில் இருந்த சில ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கண்டித்தார். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாட்சியர் சிவக்குமார் பள்ளி மாணர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.


தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதாக வருத்தத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog