திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை! தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 4ம் தேதி 1 லட்சம் ஆசிரியர் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் வாக்குறுதி தருவது சகஜமான விஷயம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வது உட்பட பல வாக்குறுதிகளை தந்து, ஆட்சியைப் பிடித்தது திமுக.
தற்போது, மு.க.ஸ்டாலின் முதல்வரானதும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆகஸ்ட் 4ம் தேதி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைப்பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயலாளர், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான உத்தரவாதத்தை கூட சட்டமன்றத்தில் கூறவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் ஊதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசை கண்டித்தும், தொடக்கப் பள்ளி முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர் பாடம் எடுத்து வருகின்றனர். அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடியாக சுமார் 14,000 காலியிடங்களை நிரப்பி ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆகஸ்ட் 4 ம் தேதி மாலை தமிழகத்தின் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதன் பிறகும் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்." என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment