ஜெ பழி வாங்கினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்ட திட்டத்திற்கு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உயிர் பிச்சை கொடுப்பாரா? பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் தருவாரா?
மே மாதம் 2010 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் 31170 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில் 8819 பேர் வருகை தராதவர்கள் 22351 பேர் வருகை தந்தவர்கள். 22351 பேரில் 11190 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. 9176 காலிப்பணியிடம் இருக்கும் போதும் மீதம் உள்ள 11161 பேரில் பணி வழங்க வேண்டும். இந்த நேரத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து மீதி காலி பணியிடம் போடப்படும் என்று காத்து கொண்டு இருந்தோம் ஆனால் எதிர்பாராமல் அதிமுக ஆட்சிக்கு வந்தது.9176 காலிப்பணியிடம் இருக்கிறது எங்களுக்கு பணி வழங்குமாறு அதிமுக அரசிடம் கோரிக்கை வைத்தோம் கலைஞர் ஆட்சி காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஒரே காரணத்திற்காக 11161 பேருக்கு அதிமுக ஆட்சியில் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அரசாணை எண் .181 தேதி :15.11.2011 அன்று தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இது கடந்த கால ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்த்து அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த எங்களுக்கு பேரிடியாக இருந்தது.
பின்னர் பாதிக்கபட்ட அன்பரசு குழுவில் 70 பேரும் பரந்தாமன் குழுவில் 24 பேரும் 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
NCTE 29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர் ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது.
இம்மனுவை விசாரித்த நீதியரசர்கள் எலிப் தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு 07.07.2013 அன்று மனுதார்களுக்கு (94 பேர் ) தகுதித் தேர்வின்றி வருங்கால காலிப்பணியிடங்களில் பணி வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இவ்வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடாது. பாதிக்கபட்டவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அனால் பள்ளிக் கல்வித்துறை 90 நாட்கள் முடியும் தருவாயில் உச்சநீதிமன்றத்தில் 18.12.2013 அன்று மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் 23.09.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் காலிப்பணியிடம் மற்றும் நிரப்பிய விதம் குறித்து ஐந்து வினாக்களை எழுப்பி தீர்வு காண வேண்டும் எனவும் மனுதார்கள் வெற்றிபெறும் பட்சத்தில் முன்தேதியிட்டு ஊதியம் மற்றும் சீனியாரிட்டி வழங்கிட வேண்டும் என வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்துகொள்ளவே பல மாதங்கள் ஆயிற்று. மேலும் நீதிபதி அக்னி கோத்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு மூன்று விசாரணை முடித்தபிறகு இவ்வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
பின்னர் நீதிபதி சிவஞானம் மற்றும் சொக்கலிங்கம் அமர்வு எங்கள் மனுவை விசாரித்து அதன் இறுதி வாதம் 04.09.2015 அன்று வந்தது. அன்று இருதரப்பினைரையும் எழுத்துபூர்வமாக அறிக்கை தர உத்தரவிட்டனர்.
இதன் இறுதி தீர்ப்பு 03.11.2015 அன்று வெளியானது.அதில் இம்மனுதார்களுக்கு பணி வவழங்கப்பட்டால் இதேபோல் 20,000 பேருக்கும் தீர்வின்றி நியமிக்க வேண்டிவரும் என வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் உச்சநீதி மன்றம் கூறிய அறிவுரைகள் பின்பற்ற வில்லை
இதில் சிறுதும் உண்மையில்லை. தீர்ப்பில் நிறைய குளறுபடிகள் உள்ளது என்பது ஆதாரத்துடன் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. உச்சநீதிமன்றம் தீர்வுக்கானச் சொன்ன மொத்த காலிப் பணியிடம் குறித்து நாம் எடுத்துவைத்த G.O 145 முதல் 170 வரையிலான காலிப் பணியிடங்களில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் 11190 மீதமுள்ள காலிப் பணியிடம் 9176ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
2.G .O 175 நாள் 08.11.2011ஐ கவனத்தில் கொள்ளவில்லை. மேற்கண்ட ஆணை அன்றைய தேதி வரை உள்ள காலிப் பணியிடம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பட வேண்டும் என தெளிவுபடுத்துகிறது.
3.G .O 20 நாள் :31.01.2011சான்றிதழ் சரிபார்பின் காலக்கெடுவை ஒரு வருடத்திற்கு நீடித்ததை கவனத்தில் கொள்ளவில்லை
4. NCTE 29.07.2011அன்று ஓர் அறிக்கை வெளியட்டது அதில் 23.08.2010 முன்னர்
ஆசிரியர் நியமனம் குறித்து விளம்பரமோ அல்லது நியமன நடவடிக்கைத் தொடங்கிருந்தாலோ அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என அறிவுறுத்தியது கவனத்தில் கொள்ளவில்லை.
5. selection process பற்றி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகு அதாவது நியமன முறை விவாதிக்க வேண்டாம் என அறிவுரையும் பின்பற்றவில்லை.
9176 காலி பணியிடங்கள் நிரப்ப 11000 பேர் காத்து இருக்கிறார்கள் ஆனால் நீதிபதி அவர்கள் 94 பேருக்கு பணி வழங்கப்பட்டால் இதேபோல் 20,000 பேருக்கும் தீர்வின்றி நியமிக்க வேண்டிவரும் என்று தவறான தீர்ப்பு அளித்து உள்ளார்.
94 பேருக்கு பணி வழங்கினால் இதை பின்பற்றி 10000 ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நேரிடும் என்ற ஒரே காரணம் தான் அரசு எப்படியோ இந்த வழக்கை தள்ளுபடி செய்ய திட்டம் போட்டு சதி செய்து உள்ளனர்.
தீர்ப்பில் பல குளறுபடி இருப்பதால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து வழக்கு கொண்டு வரும் நேரத்தில் நமது திமுக ஆட்சி அமைந்தது.
நாங்கள் 10 வருடம் அதிமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டு எங்கள் நிலை அரசிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றோம் இதுவரை எங்களுக்கு எந்த சாதகமாக பதில் வர வில்லை.
NCTE norms clause V, நீதிமன்ற உத்தரவு, கலைஞர் அறிக்கை இந்த மூன்று எங்களுக்கு சாதகமாக இருந்தும் அரசிடம் எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. கலைஞர் இருந்து இருந்தால் இந்நேரம் நாங்கள் ஆசிரியர் பணியில் இருந்து இருப்போம்.
கலைஞர் அறிக்கை கொடுத்தும் எங்களுக்கு இன்னும் விடியல் பிறக்கவில்லை காரணம் என்னவென்று தெரியவில்லை.
கலைஞர் கை எழுத்து இட்ட திட்டத்திற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உயிர் கொடுப்பாரா? பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் தருவாரா? என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.
ஒரு எடுத்துக்காட்டு ஒரு அரசாணையில் 100 காலி பணியிடத்திற்கு 100 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு அழைத்து 80 நபருக்கு மட்டும் வேலை கொடுத்து விட்டு மீதம் உள்ள 20 நபருக்கு வேலை கொடுக்காமல் தேர்வு எழுதினால் தான் வேலை என்று கூறினால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். மீதம் உள்ள 20 நபர் என்ன பாவம் செய்தார்கள் இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்.
இப்படிக்கு
S. முருகவேல்
கணித பட்டதாரி ஆசிரியர்,
விழுப்புரம் மாவட்டம்.
Very Good Explanation
ReplyDeleteதருவார் என நம்புவோம்...
ReplyDelete