1 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு




1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.



கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது


இதையடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.


அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog