கணினி, அரசியல் அறிவியல் பாட பிரிவுக்குஆசிரியர் இல்லாமல் தவிக்கும் அரசு பள்ளி



குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கணினி, அரசியல் அறிவியல் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.குரோம்பேட்டை, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.



லட்சுமிபுரம், நியுகாலனி, பொழிச்சலுார், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளை சேர்ந்த ௧,267 மாணவர்கள் படிக்கின்றனர்.இதில், கணினி பிரிவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும், 200 பேர். பழமையான இப்பள்ளி யில் கணினி, அரசியல் அறிவியல் பிரிவுகளுக்கு, இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், இப்பாடங்களை படிக்க முடியாமல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அலட்சியம்ஆசிரியர்களே தனியாக பணம் கொடுத்து, கணிணி பாடம் நடத்த அவ்வப்போது வெளியில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வருகின்றனர். இப்பள்ளியில், காலம் காலமாக அரசியல் அறிவியல் பிரிவு இருந்து வருகிறது.


அப்பிரிவுக்கும், ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை.மற்ற ஆசிரியர்கள் குறிப்பு கொடுத்து, மாணவர்கள் படிக்க உதவுகின்றனர். மற்றொருபுறம், 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்த, ஐந்து பணியிடங்கள் அறிவிக்கப்பட்டும், இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.சென்னையை ஒட்டியுள்ள ஒரு அரசு பள்ளியில், கணினி மற்றும் அரசியல் அறிவியல் பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லாதது, கல்வி துறையின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்படி ஒரு நிலை இருந்தால், பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்.இது தொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.பாதிக்கப்படும்இது குறித்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:'இல்லம் தேடி கல்வி திட்டம்' சிறந்தது என்றாலும், ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாதது வருந்தத்தக்கது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் தேர்ச்சியும், திறமையும் நிச்சயம் பாதிக்கப்படும். கல்வித்துறை அதிகாரிகளுக்கு இது புரியாதது ஏன் எனத் தெரியவில்லை. அரசு பள்ளிகள் இப்படி இருந்தால், மாணவர்களால் 'நீட்' தேர்வை எப்படி எழுத முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Comments

Popular posts from this blog