TNPSC Exam : கல்வி தொலைக்காட்சியில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் - அலைவரிசை எண் வெளியீடு
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலை வரிசை எண்களை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் 20.03.2022-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள். ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சியின் அலை வரிசை எண்கள் பின்வருமாறு.
ஏர்டெல் DTH- 821, சன் DTH- 33, TATA SKY DTH- 1554. CON d2h-597. TAC TV- 200, TCCL- 200. VK DIGITAL- 55, AKSHAYA- 17, SCV-98, GTPL- 99.
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்கள் இக்கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment