தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு..! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?




தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலிப் பணியிடங்களுக்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 2,180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1,091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் NCC, NSS, Sprots/Games சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் உருவாக்கப்படும். காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி என்று புதிய நடைமுறையைத் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, விண்ணப்பிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை நேரில் சென்றோ அல்லது 97891 18638 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog