கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு?




கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில், 163 கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட இளங்கலை படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


ஏற்கனவே அறிவித்தபடி, அரசு கலைக் கல்லூரிகளில் சேர நேற்று கடைசி நாள் ஆகும். அதன்படி, நேற்று மாலை நேர தகவலின் அடிப்படையில், 3 லட்சத்து 65 ஆயிரத்து 40 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில், 3 லட்சத்து ஆயிரத்து 274 பேர் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்திருப்பதாகவும், இதில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 332 பேர் கட்டணங்களை செலுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.


விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்று உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அதுபற்றி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிய வரும்' என்று அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பின்படி பார்க்கையில், மேலும் அவகாசம் வழங்கப்படும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டும் இதேபோல் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog