நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியீடு?





நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் என பல்வேறு பயிற்சி நிறுவனங்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியியல் 90 என நீட் வினாத்தாள் தொகுப்பு 180 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு வினாவும் 4 மதிப்பெண்கள் உடையது. சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும், தவறான விடைக்கு மொத்த மதிப்பெண்களில் இருந்து ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.


எனினும், விடைகுறிப்பின் மேல்முறையீடு செயல்முறை முடித்தபின், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் சரியானவை எனத் தெரிய வரும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்வகை சரியான தேர்வுகளை குறித்தமைக்கு நான்கு (+04) மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான தேர்வுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் (-1), தேர்வு செய்யாத அல்லது முயற்சி செய்யப்படாத வினாக்களுக்கு எந்த மதிப்பெண்ணும் வழக்கப்படாது.


ஒருவேளை, ஏதேனும் ஒரு வினா விடுவிக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ அனைத்து தேர்வர்களுக்கும் நான்கு (+4) மதிப்பெண்கள், தேர்வர் வினாவை முயற்சித்திருந்தாலும், எழுதாமல் விட்டிருந்தாலும் அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நீட் தேர்வர்கள் தாங்கள் எந்த மதிப்பெண் பெறுவோம் என எதிர்ப்பார்த்து உள்ளனர்.


இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை தேசிய தேர்வு முகமை தனது இணையதளமான neet.nta.nic.in என்ற பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. உத்தேச விடைகள் தொடர்பாக எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog