மாணவர்களின் குறை கேட்க புதிய திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர்.கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசாணைகள், 101 மற்றும் 108ல் திருத்தங்கள் செய்யப்பட்டு, முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் குறைகளை கேட்க 'மாணவர் மனசு' திட்டம் உள்ளது. அதே போல், ஆசிரியர்களின் குறைகளை கேட்க, 'ஆசிரியர் மனசு' எனும் பெட்டி, பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலும், என் வீட்டிலும் வைக்கப்படும். அதன்மூலம் வரும் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும்.
மாணவர்களின் கலை, பண்பாட்டு திறமைகள் ஒருங்கிணைக்கப்படும். மாற்றுத்திறன் மற்றும் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, வீட்டு வழி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment