பொறியியல், கலைக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு கால அவகாசம்.. உயர்கல்வித்துறை அதிரடி.!




12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி தேதி ஜூலை 27-க்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.




தமிழகம் முழுவதும் உள்ள அரசு & தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரியில் சேருவதற்கு, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் பதிவு செய்யும் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையவழியில் மாணாக்கர்கள் https://www.tngasa.in/ என்ற பக்கம் வழியே வீட்டில் இருந்தவாறு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.


தமிழ்நாடு மாநில பள்ளிகள் சார்பில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று காலை சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மத்திய கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.


அதனைத்தொடர்ந்து, சி.பி.எஸ்.இ வழியே 12 ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களும் மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்வும் பொருட்டு, அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரவிரும்பும் மாணவர்கள் ஜூலை 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog