முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்கை.! ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம்.! முழு விவரம் உள்ளே.




இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 -23-ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.


12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு chttps://tnau.ac.in/ என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம். இது தவிர பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலைப் பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog