அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு



சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

163 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. CBSE முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.


அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.64 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேவைக்கேற்ப கல்லூரிகளின் இடங்கள் 10% முதல் 15%

வரை அதிகரிக்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு இதுவரை 2.2 லட்சம் மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் திட்டம் தொடங்கப்படும்.


'நான் முதல்வன்' திட்டத்தின் படி பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog