குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்?
தமிழ அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த வார இறுதிக்குள் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 2 தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், குரூப் 4 தேர்வுக்கும் அதேபோல் வெளியிடப்படலாம் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூறுகின்றனர்.
வழக்கத்துக்கும் மாறாக இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வினாத்தாள் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் தேர்வுக்கு தயாராவோரிடம் இருக்கிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில், அதிகமானோர் விண்ணபித்தபோதெல்லாம் வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், கட்ஆப் மதிப்பெண் மிக அதிகமாக எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால், நீண்ட நாட்கள் குரூப் 4 தேர்வுக்காக பயிற்சி பெறுபவர்கள் வினாத்தாள் மிக கடினமாக இருந்தால் நல்லது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
எந்த மாதிரி வினாத்தாள் இருந்தாலும் நன்றாக படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எளிமையாக இருக்கும்போது கவனக்குறைவான தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்வர்கள் கூறுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியிட்ட பிறகு, tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஜூலை 23 ஆம் தேதி நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, அக்டோபரில் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment