அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை
அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இப்பள்ளிகளில் 3,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றால் முழுமையாக காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையை தவிர்க்க முடியாது என்று ஆசிரியர் சங்கங்கள் வேதனை தெரிவித்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெற்று டெட் தேர்ச்சி பெறாதவர்களையும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தி கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் கடந்த காலங்களில் அரசு கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்கள் 4,681 பேருக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment