வயர்மேன் ஹெல்பர் தகுதி தேர்வு வரும் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வயர்மேன் ஹெல்பர் தகுதி தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கம்பியாள் உதவியாளர் (வயர்மேன் ஹெல்பர் - காம்ப்படென்சி தேர்வு) தகுதி தேர்வு, செப்., 24 மற்றும், 25ல் நடக்கிறது.
தகுதி வாய்ந்த மின் கம்பியாள் உதவியாளர்கள், தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின் கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மின் ஒயரிங் தொழிலில், 5 ஆண்டுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில், 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பம் மற்றும் விளக்க குறிப்பேட்டை, https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஏதாவது ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்து, விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
போதுமான விண்ணப்பம் வராவிட்டால், தேர்வு மையங்களில் மாற்றம் இருக்கும்.தேர்வு மையம் முடிவு செய்வதில் துறை தலைவரின் முடிவே இறுதியானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், வரும், 26ம் தேதிக்குள் கிடைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு: 0422 - 2642 041, 88385 83094 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment