2013 ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களை நிரந்தர ஆசிரியா்களாக பணி நியமனம் செய்ய கோரிக்கை
கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களை நிரந்தர ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2013-ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்கள் சாா்பில், செருவாவிடுதி ப. பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
திமுக தோதல் அறிக்கையில் 2013-ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்பவா்களை ஆட்சிக்கு வந்தால் பணி நியமனம் செய்வோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறாக, தற்காலிக ஆசிரியா் நியமனம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் தேர்ச்சி பெற்ற பலரும் பணி நியமனம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்த நிலையில், அரசின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.
மேலும் 2023, ஜனவரியிலிருந்து ஆசிரியா் பணி நியமனத்துககான வயது உச்சவரம்பு 47 எனக் கூறப்படுகிறது. தோச்சி பெற்று காத்திருப்போரில் பெரும்பாலானவா்கள் தற்போது 45 வயதைக் கடந்தவா்களாக உள்ளனா். இந்த முறை நியமனம் செய்யாவிட்டால், தேர்ச்சி பெற்ற பெரும்பாலானவா்கள் ஆசிரியா் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்.
எனவே தற்போது நியமனம் செய்யப்படவுள்ள தற்காலிக ஆசிரியா் பணியிடங்களில், 2013-இல் ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவா்களை பி.எட் பதிவு மூப்பு அடிப்படையில் நிரந்தர ஆசிரியா்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
Comments
Post a Comment