தமிழ் வழியில் படித்தவர்களை மண்டை காய விடும் தமிழக அரசு பணி தேர்வாணையம் - ஒரே அறிவிப்பில் இவ்வளோ குழப்பமா?



தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதிலும் சிலர் ஒரு டிகிரி மட்டும் தமிழில் படித்துவிட்டு இடஒதுக்கீடு கேட்டதால், 1ஆம் வகுப்பு முதல் தகுதிப் படிப்பு வரை தமிழ்வழியில் படித்தால் மட்டுமே தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவர் என கோர்ட் உத்தரவிட்டது.



இந்த நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட உதவி ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பில், தமிழ்வழி இடஒதுக்கீட்டை பெற வேண்டுமெனில், பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, முதல் இளநிலைப் பட்டம் தமிழ்வழியில் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவதை தமிழ்வழியில் கணக்கில் கொள்ள முடியாது என சொல்ல வருகிறார்கள்.


இதற்கிடையில், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் விதமாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கும் "Frequently asked questions" ஆவணத்தில் முதல் பட்டப்படிப்பை ஆங்கிலவழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ்வழியில் படித்திருந்தாலும் தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.


தமிழக அரசின் இருவேறு தேர்வாணையங்கள் வெவ்வேறு விதங்களில் தங்களது விதிமுறைகளை வகுத்திருப்பது, தேர்வர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Comments

Popular posts from this blog