"10,300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்"... அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!!!
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதியதாக 1,0300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: "ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 31 பள்ளிகள் பழுதடைந்துள்ளது. இவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தற்போது மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தேவையை பூர்த்தி செய்ய நடைபாண்டில் 10,300 ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment