கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புக்கு தரவரிசை பட்டியல் 1ம் தேதி வெளியீடு?
: தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.
நடப்பு ஆண்டிலும் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை அளித்த புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவிகள் இருந்து வரும் நிலையில், நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment