TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
Home news TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
news
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
By vasanthi- June 12, 20220
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் முக்கிய தகவல்!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் முக்கிய தகவல்!
TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் 1 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழக ஆசிரியர் தேர்வாணையம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்துள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலம் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடை நிற்றலை தவிர்க்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பழங்குடியினர் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வி படிப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கி கல்லுரியில் சேருவதை உறுதி செய்திட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி விளையாட்டில் அவர்களின் தனித்திறனை வெளிக்கொணர ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment