TNPSC Group 1 Result 2022: வெளியானது குரூப் 1 தேர்வு முடிவுகள்.. காண்பது எப்படி?




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் தேர்வு செய்யப்படுவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேரு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர்.


இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.


முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோருக்கு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது.


அதேபோல முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 29) வெளியாகி உள்ளன. இதில் 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog