பெற்றோர்களே கவனம்.. இனி LKG, UKG வகுப்புகள் அங்கன்வாடியில் கிடையாது.! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு..!
தமிழகத்தில் சோதனை அடிப்படையில் 3 ஆண்டிற்குள் அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் 52,933 குழந்தைகளை LKG, UKG வகுப்புகளில் சேர்ப்பதற்கு 3 ஆண்டிற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும், மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பொறுத்து திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சத்துணவு மற்றும் சமூகநலத்துறை செயலாளர் மணிவாசகன் கடத்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2019-20-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் அரசாணை வெளியிடும் போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது.
2020 மார்ச் மாதம் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா மூன்று அலைகளின் போதும் மழலையர் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்து வந்தன.
2022 பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட LKG, UKG வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2,381 அங்கன்வாடி மையங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மையங்களில் LKG. UKG வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படாது என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
Comments
Post a Comment