திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு





திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் இயங்கும் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பள்ளிக்கூடம் இயங்கும் நேர மாற்றம் குறித்து தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கப் பட்ட பின்பு அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார்ப் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


முன்னதாக கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பணி ஆணைகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் வழங்கினர்.

Comments

Popular posts from this blog