டிஎன்பிஎஸ்சிக்கு தற்காலிக தலைவர்




டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதையடுத்து தற்காலிக பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக இருந்த அருள்மொழி ஐ.ஏ.எஸ். கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைவராக பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், பழனி துணை ஆட்சியராக 1986ம் ஆண்டு தனது பணியினை தொடங்கினார். 1994ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார்.


தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவராக பணிபுரிந்துள்ளார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் வயது அடிப்படையில், கடந்த 9ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் டிஎன்பிஎஸ்சியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog