தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணிகளில் 13,331 காலியிடங்கள் நிலவுகின்றன. இவற்றை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை கொண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே இடைநிலை, பட்டதாரி ஆசிரியருக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனால் மாறுதல் கலந்தாய்வு முடிந்தபின் தற்காலிக ஆசிரியா் பணிநியமனத்தை மேற்கொள்ள வேண்டுமெனகோரிக்கைகள் எழுந்தன. அதையேற்று தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் சாா்ந்த புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பின்பு தற்காலிக ஆசிரியா் பணிநியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றிபுகாா்களுக்கு இடமளிக்காதவாறு காலிப்பணியிடங்களை தலைமையாசிரியா்கள் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை
Comments
Post a Comment