கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000; தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உத்தரவு
அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக்கணக்கு விவரம் ஆகியவற்றை பெற ஆணையிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என்றும் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும். கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15-ம் தேதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க ஏதுவாக, இப்பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
Comments
Post a Comment