கல்வித்துறையில் மாற்றம் தொடக்க, மேல்நிலையை பிரிக்க முடிவு
பழைய கஞ்சி... புதிய பானையில்' என்ற கூற்றிற்கு ஏற்ப தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
தனியார், உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது.
இதை மீண்டும் பழைய முறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.நர்சரி, தொடக்க, நடுநிலை பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உயர், மேல் நிலை பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க உள்ளது. அதே போன்று பள்ளி அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் இணை இயக்குனருக்கே செல்கிறது.
இதற்காக தமிழக அளவில் 9 மண்டலங்களை ஏற்படுத்தி மண்டலத்திற்கு ஒரு இணை இயக்குனரை நியமிக்க உள்ளனர். மதுரையில் இன்று (ஜூன் 18) முதல் 25 வரை கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான கருத்தரங்கு நடக்க உள்ளது.அதில் இந்த மாற்றத்தை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்க உள்ளனர்.
ஜூலை 'முதல் 'பழைய கஞ்சி... புதிய பானையில்' என்ற கூற்றுப்படி தமிழகத்தில் மீண்டும் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வியை தனியாக பிரித்து நிர்வகிக்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்
Comments
Post a Comment