'சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை' : பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்




திருச்சி : சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சோத்து உரிய தீா்வு காண உதவியாக இருப்பேன் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க கோரிக்கை மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் மேலும் பேசியது:


திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியா்களுக்கு, குறிப்பாக சத்துணவு ஊழியா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். ஏனெனில், திமுகவை ஆட்சியில் அமர வைப்பதில் அரசு ஊழியா்களிலேயே அதிகப் பங்களிப்பு சத்துணவு ஊழியா்கள்தான் என்பதை மறக்கமாட்டோம்.


தமிழகத்தில் 65 ஆயிரம் சத்துணவு மையங்கள், 55 ஆயிரம் அங்கன்வாடிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் உள்ளனா். இவா்கள், சமூக நலத் துறையின் கீழ் பணிபுரிந்தாலும், பள்ளிக் கல்வித் துறையில்தான் பணிபுரிவதாகவே கருதுகிறேன்.


பள்ளிக்கு வரும் மாணவா்களின் பசியறிந்து உணவளிப்பது சத்துணவு ஊழியா்களே. இதைக் கருத்தில் கொண்டுதான் சத்துணவு ஊழியா்களுக்கு மறைந்த முதல்வா் கருணாநிதி பல்வேறு சலுகைகளை வழங்கினாா். அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் அரசு ஊழியா்களுக்கும், சத்துணவு ஊழியா்களுக்கும் தோதல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா். கோரிக்கை மாநாடு வழியாக சத்துணவு ஊழியா்கள் என்னிடம் அளித்த மனுவை திங்கள்கிழமை சென்னையில் முதல்வரிடம் அளித்து உரிய தீா்வு காண உதவியாக இருப்பேன்.


முதல்வா் தெரிவிக்கும் நல்ல தகவலை சத்துணவு ஊழியா்களிடம் தெரிவிக்கும் வாய்ப்பைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் அவா்.


மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ரா. கலா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் அ. மலா்விழி, கோரிக்கைகளை விளக்கினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கப் பொதுச் செயலா் ஆ. செல்வம் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.


திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா், எம்எல்ஏ-க்கள் எம். சின்னதுரை, க. மாரிமுத்து, எஸ்.எஸ். பாலாஜி, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் கு. வெங்கடேசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் மூ. மணிமேகலை உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோந்த மாநில நிா்வாகிகள் பேசினா்.


சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் சுந்தரம்மாள், முன்னாள் மாநிலச் செயலா் சத்தி, முன்னாள் மாநில துணைத் தலைவா் பாண்டி, மாநில துணைத் தலைவா்கள் பேயத்தேவன், பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, மாநிலச் செயலா்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிசெல்வி, லதா, நிா்மலா ஆகியோா் பேசினா். அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு. அன்பரசு நிறைவுரையாற்றினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சத்தியவாணி வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் திலகவதி நன்றி கூறினாா்.


மாநாட்டின் தொடக்கமாக ராமேஸ்வரம், மயிலாடுதுறை, கும்மிடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூா், கன்னியாகுமரி, ஒசூா் ஆகிய 7 முனைகளில் இருந்து வந்த மாநாட்டு பிரசார நடைபயண குழுக்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியா்கள், சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog