BE கலந்தாய்வு - தொடங்கியது ஆன்லைன் விண்ணப்ப பதிவு;இங்கே விவரம்!




தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.இந்நிலையில்,பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது.


அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக,அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,மேலும்,இதற்காக 110 சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-31 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனிடையே,ஜூலை 22 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.


இதனையடுத்து,ஆக.8 ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஆக.16 ஆம் தேதி முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில்,அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு உறுதியாக பின்பற்றப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.மேலும்,நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைப் போல்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இனி அனைத்து பாடங்களும் முழுமையாக (100 %) நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog