50 வயது வரை தகுதி... வழிகாட்டுதல் வெளியீடு!!
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது .
மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும் , மதிப்பூதியம் ரூ .7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார் . இந்நிலையில் இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அந்தக் கடித்தில் மக்கள் நல பணியாளர்ளுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் .
சம்பந்தபட்டவர் அந்த கிராம ஊராட்சியில் வசிக்க வேண்டும் . குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும்.
அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம்.
கணினி குறித்த அடிப்படை அறிவு முன்னுரிமை தகுதி. ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்கள், மாற்றித்திறனாளி பெண்கள், பட்டியலின பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் புத்தக காப்பாளர்கள், சமுதாய வல்லுநர், சமுதாய வள பயிற்றுர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment