மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலை கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்றார். முன்னதாக, மலைக் கிராமத்திற்கு புறப்பட்ட அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் சண்முகவடிவு பணி நேரத்தில் பணியில் இல்லாதாததும், மருத்துவர் தினகரன் அவரது மகனை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்திய காரணத்திற்காக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவத் துறையில் உள்ள 4,000 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அக்னிபத் திட்டம் குறித்த கேள்விக்கு ராணுவப் பணி என்பது தேசப் பணி. அதனை ஒப்பந்த அடிப்படையில் செய்வது ஏற்புடையதாக இருக்காது. எனவே இத்திட்டத்தை முதல்வர் கூறியதுபோல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
Comments
Post a Comment