மாநில கல்வி உருவாக்கம் : வழிகாட்டும் அரசாணை வெளியீடு




ஜூன் 3 சமத்துவக் கல்வி, தேர்வு முறை சீர்திருத்தம் போன்றவற்றை உள்ளடக்கிய மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கான வழிகாட் டுதல் அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.



ஓராண்டுக்குள் கல்விக் கொள் கையை உருவாக்கி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென தனிச் சிறப்பு கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்திருந்தது.


ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு


அதன்படி, மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலை மையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக சவீதா பல் கலைக்கழக மேனாள் துணைவேந் தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானு ஜம், மாநில திட்டக் குழு உறுப் பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் மேனாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வி யாளர் துளசிதாஸ், அரசு நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட் டளை தலைவர் ஜெயசிறீ தாமோ தரன் ஆகியோர் நியமிக்கப்பட் டனர்.


இந்நிலையில், மாநில கல்விக் கொள்கைக்கான வழிகாட்டு தல்கள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளி யிட்டுள்ளார். அதன்விவரம்:


மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் இருப்பார். குழு உறுப்பினர் - செயலராக தனியார் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார். தமிழ் நாட்டின் வரலாற்று மரபு, தற் போதைய நிலைமை, எதிர்கால தேவைக்கேற்ப மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள் கையை தயார் செய்ய கல்வி நிறுவ னங்கள், மாணவர்கள், கல்வியா ளர்கள், பெற்றோர்கள், ஆசிரி யர்கள் என்று பல்வேறு தரப்பின ரிடம் கருத்துகளை பெற வேண்டும். தமிழ்நாடு இளைஞர்களின் எதிர் காலத்தை மனதில் வைத்தும், உலக ளாவிய கல்வி, வளரிளம் பருவத் தினருக்கான கல்வி, தொழில்நுட் பங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டும்.


இதுதவிர ஆசிரியர், பேரா சிரியர் நியமனம் மற்றும் தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய சீரமைப்புகள், உயர்கல்வி ஆராய்ச் சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும். சமத்துவக் கல்வி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம் இவற்றுடன் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொட ரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும். இவற்றை அடிப் படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை ஓராண்டுக்குள் தயார் செய்து அரசிடம் சமர்ப் பிக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog