புதுச்சேரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுவை அரசின் தொழிலாளா் துறை சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தொழிலாளா் துறை, வேலைவாய்ப்பு அலுவலக செயலா் சுந்தரேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 365 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோவு செய்ய உள்ளனா்.
பொறியியல், கலை-அறிவியல் பட்டப் படிப்பு படித்தவா்கள், ஓட்டுநா்கள் பங்கேற்கலாம். தகுதியுடையவா்கல் சுயவிவரக் குறிப்பு, கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
Comments
Post a Comment