நீட் 2022 தேர்வு விண்ணப்பத்தில் கரெக்ஷன் செய்யணுமா? தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!
2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்பத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்றுதான் இந்த வசதி தொடங்கியிருக்கிறது என்றபோதிலும், இது நாளையுடன் முடிவடைகிறது. இரண்டு நாள்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த வசதி மூலம், விண்ணப்பத்தில் பிரிவுகள் ஏதேனும் தப்பாக கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த தரவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். விண்ணப்பத்தாரர்கள் எந்தப்பிரிவில் தவறான தரவை கொடுத்தாளர்களோ, அப்பிரிவில் தங்களின் சரியான தகவலை கொடுத்துவிட்டு, அதற்காக ஒரு ஆதார சான்றிதழை ஸ்கேன் செய்து அவர்கள் பதிவேற்ற வேண்டியிருக்கும்.
இச்சேவையை, neet.nta.nic.in என்ற தளத்தில் உள்ள பின்வரும் Category Correction Window வின் கீழ் இதை அவர்கள் சரிசெய்துகொள்ளலாம்.
நாளை இரவு 9 மணியுடன் இச்சேவை முடிவடைகிறது. இந்தச் சேவையை பயன்படுத்துவோர், அதற்கான கூடுதல் தொகையை செலுத்தவேண்டியிருக்கும். தொகையை டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், யு.பி.ஐ என எந்த வகையில் வேண்டுமானாலும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும், இதன்பின் தவறாக தகவல் கொடுப்போரின் விண்ணப்ப சேர்க்கை அனுமதிக்கப்படாது என தேசிய தேர்வு முகமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் ஆன்லைனில் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கைகள் முடிவுக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு அட்மிட் கார்ட், தேர்வு மையம், செய்தி அறிவிப்புச் சீட்டு (எ) இண்டிமேஷன் ஸ்லிப் ஆகியவை தரப்படும். இதில் இண்டிமேஷன் ஸ்லிப் அடுத்த வாரத்திலும், அட்மிட் கார்ட் ஜூலை முதல் வாரத்திலும் வழங்கப்படக்கூடும் என்று தெரிகிறது. neet.nta.nic.in என்ற தளத்தில் நீட் தேர்வு தொடர்பான அப்டேட்களை காணலாம்.
Comments
Post a Comment