தற்காலிக ஆசிரியர்கள் 1,593 பேர் பணி நியமனம் செய்ய முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 தற்காலிக ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 13ஆயிரத்து, 331 காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பி, வரும் ஜூலை,1 முதல் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,748 காலி பணியிடங்களும் அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 906 காலி பணியிடங்கள், பட்ட தாரி ஆசிரியர்களுக்கு, 623 காலி பணியிடங்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு, 64 காலி பணியிடங்கள் என மொத்தம், 1,593 காலிப்பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் எந்தெந்த பள்ளிகளில் உள்ளது என்பதை அறிய அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இதேபோல பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.காலியாக உள்ள பணியிடங்களில் பள்ளியின் தலைமையாசிரியர், மேலாண்மை குழுவினருடன் இணைந்து தற்காலிகமாக பணி நியமனம் செய்யலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment