தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் பெயர்: Tamil Nadu Education Fellowship
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fellows
காலியிடங்கள்: 114
சம்பளம்: மாதம் ரூ.32,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பணி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் கூடுதல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30.06.2022 ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும்படி விண்ணப்பிக்கவும்.
Comments
Post a Comment