பிளஸ் 1ல் சேர்க்கை பள்ளிகளுக்கு அறிவுரை


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், மதிப்பெண் தரவரிசைப்படி, மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், பிளஸ் 1 சேர்க்கை தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர்கள் தரப்பில், அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும். 


இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது. இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog