TNPSC Group 2: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு?
TNPSC group 2 exam cut off marks details here: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும், கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாள் மதிப்பீடு மே - ஜூன் மாதங்களில் நடைபெற்று, தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான ஆன்சர் கீ ஒரிரு நாட்களில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும் என தெரிகிறது.
குரூப் 2 தேர்வைப் பொறுத்தவரை தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ் மற்றும் கணித பகுதி எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும் பல தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் தமிழ் மொழிப்பாட வினாக்கள் பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், சில வினாக்கள் மிகவும் நுணுக்கமாக கேட்கப்பட்டுள்ளது, இதனால் விடையளிக்க கடினமாக இருந்தது. எனவே தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ ஆன்சர் கீ வந்தவுடன் தான், தமிழ் பகுதி எளிமையானதா? அல்லது கடினமானதா? என கூற முடியும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், இந்த குரூப் 2 முதல் நிலைத் தேர்வுக்கு கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி தேர்வர்களிடம் எழுந்துள்ளது. தேர்வாணைய ஆன்சர் கீ வெளியாகாத நிலையில், தேர்வர்களின் தற்போதைய கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது, பொது பிரிவினருக்கு 165 - 175 வரையிலும், BC/MBC/BCM உள்ளிட்ட பிரிவினருக்கு 155-165 வரையிலும், SC பிரிவினருக்கு 150-160 வரையிலும், ST பிரிவினருக்கு 145-155 வரையிலும் கட் ஆஃப் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள உட்பிரிவுகளுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக வர வாய்ப்பு உள்ளது. இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, வினாக்களின் எண்ணிக்கையே. தேர்வுக்கான மதிப்பெண்கள் இல்லை என்பது நினைவிலிருக்கட்டும்.
Comments
Post a Comment