21-ம் தேதி TNPSC Group 2: எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்? பாலச்சந்திரன் பேட்டி
TNPSC chairman Balachandran explains group 2 exam question paper: வருகின்ற மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
அந்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 11,78,175 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண்கள் 300. தமிழ் அல்லது ஆங்கிலப் பகுதியிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். கணிதப் பகுதியிலிருந்து 25 வினாக்கள் இடம்பெறும். இந்த 200 வினாக்களும் 10 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுக்கு முதல்நிலைத் தேர்விலிருந்து 1:10 என்ற அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment