TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?
TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது?
தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம்.
அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் இரண்டு பகுதிகளாக இருக்கும். முதல் பகுதி நாம் விடையளிக்க கூடிய பகுதி. இரண்டாம் பகுதி நம்முடைய சுய விவரங்களை நிரப்ப வேண்டிய பகுதி. இவை ஓ.எம்.ஆர் ஷீட்டின் முதல் பகுதியில் இருக்கும். இரண்டாம் பகுதியில் வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அந்தப் பக்கத்தில் உங்களின் கையொப்பம் இட வேண்டும். இதனை தேர்வு துவங்கும் முன் தேர்வறையில் இட வேண்டும்.
ஓ.எம்.ஆர் ஷீட்டில் தேர்வரின் பெயர், பதிவெண், பாடம், தேர்வு மையம், தேதி உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். அவை சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக கொஸ்டின் புக்லெட் நம்பரை (வினாத்தாள் தொகுப்பு எண்) எழுதி, அதற்குரிய இடங்களில் ஷேடு செய்ய வேண்டும்.
பின்னர் தேர்வு தொடங்கிய பின்னர், ஒவ்வொரு வினாவையும் ஒருமுறைக்கு இருமுறை படித்து, சரியான விடையை தேர்ந்தெடுத்த பின், அந்த வினாவிற்குரிய சரியான ஆப்சனில் கவனமாக ஷேடு செய்ய வேண்டும்.
200 கேள்விகளுக்கும் கண்டிப்பாக ஷேடு செய்ய வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு ஆப்சன் 'E' என்பதை ஷேடு செய்ய வேண்டும். ஏதாவது கேள்விக்கு ஷேடு செய்யாமல் விட்டால் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.
அடுத்ததாக, தேர்வு முடிந்த பின்னர் ஓவ்வொரு ஆப்சனிலும் எத்தனை கேள்விகளுக்கு பதிலளித்தீர்கள் என்பதையும் குறிப்பிட்டு ஷேடு செய்ய வேண்டும். பின்னர் இடது கை பெருவிரல் ரேகை, மற்றும் கையொப்பம் விட வேண்டும். முக்கியமாக, ஓ.எம்.ஆர் ஷீட்டில் குறிப்புகளோ, கிறுக்கல்களோ இருக்க கூடாது.
அடுத்ததாக கேள்விகளுக்கு விடையளிக்கும்போது, கேள்வியை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பதிலளியுங்கள். தெரியாத கேள்விக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், அந்த கேள்வியை விட்டு விட்டு, அடுத்த கேள்விக்கு விடையளியுங்கள். 200 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்றாற் போல் விரைவாகவும், அதேநேரம் கவனமுடனும் செயல்படுங்கள்.
Comments
Post a Comment