TNPSC Group 2: கேள்விகள் கடினம்; கட்-ஆஃப் மதிப்பெண் குறையுமா?
தமிழகம் முழுவரும் நேற்று நடைபெற்ற குருப் 2 தேர்வில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கட் ஆஃப் மார்க் குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசு பணியிடங்களை நிரப்பும் வகையில் நேற்று குருப் 2 தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கு அதிகமானோர் எழுதிய இந்த தேர்வில். கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததாக பலரும் கூறியுள்ள நிலையில். தமிழ் பாடத்தில் இரண்டு கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பொதுஅறிவு பிரிவில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர்.
மேலும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு உள்ளாகவும் குறிப்பாக தமிழக பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தொடர்பான கேள்வியும், தாவரவியலாளர் ஜானகி அம்மாள் என்ற கேள்வியும் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நேதாஜி தொடர்பான கேள்வி தமிழில் ஒரு மாதிரியும், ஆங்கில மொழி பெயர்ப்பில் ஒரு மாதிரியும் இருந்தாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர்.
கேள்விகள் கடினமாக இருப்பதாக தொடர்ந்து தேர்வர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கட் ஆஃப் மார்க் குறையுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வில் எந்த கேள்வியோ ஆப்ஷன்களோ மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல.
இன்னும் 5 நாட்களில் டென்டேட்வ் ஆன்சர் கீ வெளியிடப்படும் என்றும், தேர்வர்கள் தங்களது ஆட்சேபங்களை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின் வல்லுநர்கள் குழு கூடி விடைகளை இறுதி செய்யும் என்று விளக்கம் அளித்துள்ளது.
Comments
Post a Comment