TNPSC குரூப்-2 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு.. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு. முழு விவரம் இதோ.!!!!!!!
சுமார் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்தியுள்ளது.
அந்த வகையில் 5529 பதவிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருக்கின்றனர். அதேநேரம் குரூப் 2 தேர்விற்கு பதிவு செய்த 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்திருக்கின்ற நிலையில் இதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதியதில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகின்றது. அதே சமயம் கடைசி கட் ஆப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
அதன்படி ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு கட்-ஆஃப் மதிப்பெண் 100 பேருக்கு மேல் பெற்றிருந்தால் அந்த நூறு பேரும் முதன்மைத் தேர்வை எழுதலாம். இந்த கணக்கின் அடிப்படையில் சுமார் ஆயிரத்து 5529 பணியிடங்களுக்கு 60,000 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் இது தவிர முதல்நிலைத் தேர்வில் தமிழ் மற்றும் கணிதம் தவிர பொது அறிவு பகுதி கடினமாக இருந்ததால் கட்ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் பொது பிரிவினருக்கு 145, BC பிரிவினருக்கு 140, MBC பிரிவினருக்கு 135 முதல் 140 வரையிலும், SC மற்றும் SCA பிரிவினருக்கு 132 முதல் 135 வரையிலும், ST பிரிவினருக்கு 130 வரையும் கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கலாம். மேலும் இதனுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு இருக்கின்ற நிலையில், 20 வினாக்களுக்கு மேல் சரியாக விடை எழுதியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம்.
Comments
Post a Comment