TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் பற்றி.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் அரசு துறைகளில் தேவையான அளவு பணியாட்கள் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னையில் மருத்துவர்களின் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.
இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் 1008 மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து 1000 மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் மருத்துவத்துறையில் மருத்துவர், 18 வகையான சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் சுமார் 4,308 பணி இடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்து உள்ளார். மேலும் இந்த காலிப்பணியிடங்கள் மருத்துவ தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் நிரப்பப்பட இருக்கிறது. அத்துடன் தேர்வு வாரியத்துக்கு இதுகுறித்து இணையதளத்தில் அறிவிப்புகள் வெளியிடுவது, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 4 மாத கால அவகாசம் வேண்டும். இதனால் இந்த காலிப்பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment