நீட் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்ய அனுமதி!!
ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்த நிலையில், இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 6 என தெரிவித்திருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்ட நிலையில், மீண்டும் மே 20-ந் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தங்கள் விவரங்களை திருத்தம் செய்துகொள்ள, விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் நாளை மறுநாள் ( மே 27) இரவு 9 மணி வரை திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
அதன்பிறகு, விண்ணப்பத்தில் எந்தத் திருத்தமும் செய்ய முடியாது என்பதால், தேர்வர்கள் மிக கவனமாக திருத்தம் செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறுவித்துள்ளது.
Comments
Post a Comment