ராணுவப் பள்ளியில் ஆசிரியர், எழுத்தர் பணிவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்



முதல்நிலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பைசாபாத்தில் உள்ள ராணுவப் பள்ளி வெளியிட்டுள்ளது.


ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பணியிடங்கள் :

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (அங்கிலம், இயற்பியல், புவியியல் ) பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் (TGT) - ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

முதல்நிலை ஆசிரியர் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடக்கக் கல்வியில் 2 ஆண்டுகள் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

செயல்பாட்டு ஆசிரியர் (கலை மற்றும் கைவினைப் பொருட்கள்) சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இசை ஆசிரியர்

தலைமை எழுத்தர் ராணுவத்தில் எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் இதற்கு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும்.

மேல்நிலை எழுத்தர்(யுடிசி) பி.காம் முடித்தவர்கள் (அல்லது) ராணுவத்தில் 15 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை எழுத்தர் (எல்டிசி) பட்டதாரிகள் (அல்லது) ராணுவத்தில் 10 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

துணை மருத்துவ ஊழியர்கள் 10+2 கல்வி, நர்சிங் படிப்பில் டிப்ளமோ, 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

ஆய்வு உதவியாளர் அறிவியல் பாடத்துடன் 10+2 கல்வியை முடித்திருக்க வேண்டும்.


மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2021 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். பணி அனுபவம் நிபந்தனைகள் கோரும் பதவிகளுக்கு 57க்கு கீழ் இருக்க வேண்டும்.



ராணுவப் பள்ளி வரைமுறையின் படி சம்பளம் கொடுக்கப்படும்.


விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை www.apsfaizabad.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.


வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே எழுத்து மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பங்களுடன், கல்வி தகுதி, பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அணைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி: ராணுவ பள்ளி, பைசாபாத்


07.06.2022 தேதிக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.




Comments

Popular posts from this blog